பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Wednesday, May 15th, 2024

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த சட்டமூலத்தின் ஆரம்ப வரைவுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி தயாரிக்கப்பட்ட சட்டமூல வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. இந்தநிலையில் குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: