பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

Sunday, November 7th, 2021

உரம் மற்றும் விவசாய இரசாயனங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

பொருளாதார மையங்களுக்குக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உரம் மற்றும் விவசாய இரசாயன பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக, விவசாயிகள் பயிர்செய்கையில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருப்பதனால், பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாகத் தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: