பொருளாதார நெருக்கடி – நாடாளுமன்றில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவிப்பு!
Monday, May 2nd, 2022நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு கடந்த வாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அதன் அனைத்து பிரதேச தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன்படி, நாடாளுமன்றத்தின் தொலைபேசிகளில் இருந்து தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் எழுதுபொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு நாடாளுமன்ற செயலாளர், திணைக்கள தலைவர்களுக்கு முன்னதாக பணிப்புரை விடுத்திருந்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் உணவு வீணாவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உணவகப் பிரிவின் தலைவர்களுக்கு செயலாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொருளாதார நிலை காரணமாக, நாடாளுமன்றில் தினமும் தயாரிக்கப்படும் உணவுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|