பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு இடமளிக்கப்படாது – பிரதமர்!

Friday, February 3rd, 2017
கடன் சுமை காரணமாக நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கை – அமெரிக்கா வணிக சபை இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த “ப்ரய்ம் மினிஸ்டர் ஸ்பீக்ஸ் 2017” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளை முகாமை செய்து கொண்டு முன்னோக்கி செல்வதற்கு தமது அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.  அத்துடன் இந்த ஆண்டு முதல் பாடசாலை விளையாட்டை முன்னேற்றுவதற்காக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.  மாணவர்களின் திறமைகளின் படி செல்ல வேண்டிய பாதையை தீர்மானிக்கக் கூடிய கல்வி முறையை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

ranil-pm-400-seithy2

Related posts: