பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு!

Tuesday, July 11th, 2023

இலங்கை மக்களுக்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன் காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர் என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை மக்களிற்கே உரிய நெருக்கடியிலிருந்து மீளும் திறன் காரணமாக இது சாத்தியமாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்காரணமாக இலங்கையால் அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கி செல்வது குறித்து சிந்திக்க முடிகின்றது எனவும் தற்போதைய சூழ்நிலையை உருவாகுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அற்புதமான தீவுக்கான மகத்தான வாய்ப்புகளை ஆராயும் தருணம் தற்போது வந்துள்ளது என்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன அதிக திறன் கொண்ட துறைகளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: