பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவ தயார் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Sunday, April 24th, 2022

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அந்த நிதியம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மேலும், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக ஏனைய அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: