பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – அமெரிக்க தூதுவர் ஜுலி ஜங்க் உறுதியளிப்பு!

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி ஜங்க் தெரிவித்தார்.
அமெரிக்கன் ஜ.ஹப் மட்டக்களப்பு கல்லடியில் இன்று காலை அமெரிக்க தூதுவரினால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது அதிதிகள் இனியம் இசைவாத்தியத்தோடு வரவேற்கப்பட்டு அமெரிக்கன் ஜ ஹப் காரியாலயத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் ரிப்பன் வெட்டி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கணணி கூடம் மற்றும் லேசர் தொழில்நுட்பகூடம் என்பவற்றை பார்வையிட்டதுடன் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதனையடுத்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன் நிறைவில் அமெரிக்க தூதுவர் ஜுலி ஜங்க் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இருவருக்கும் நினைவுப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்,
இந்த ஆண்டு எமது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளின் 75 ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகையில், இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, புத்தாக்கம், தலைமைத்துவம், கல்வி மற்றும் ஒத்துழைப்பை பேணிவளர்த்தல் போன்ற விடயங்களில் ஒரு பெரும் நம்பிக்கையை இந்நிலையம் வழங்குகிறது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த மற்றும் உறுதியான பங்காண்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அனைத்து மக்களும் சௌகரியமாகவும், உத்வேகமாகவும் உணரும் ஒரு இடமாக இது விளங்கும் என நான் நம்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|