பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயம் மீண்டு வரும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!
Saturday, August 13th, 2022நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயம் மீண்டு வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நமபிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற பெரஹரா இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டு வரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சவாலான காலங்கள் வரக்கூடும் எனவும் அதிலிருந்து மீண்டு, மக்கள் நாட்டுக்கான புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாட்டுக்கு பொருத்தமான அதிகாரப்பகிர்வே நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர்
ஒரே தடத்தில் இரண்டு தொடருந்துகள் சாதுரியமான முயற்சியால் விபத்து தவிர்ப்பு- கோண்டாவிலில் சம்பவம்!
பருத்தித்துறையில் 6 வர்த்தகர்கள் தலைமறைவு - 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடுதல்!
|
|