பொருளாதார நெருக்கடியில் இலங்கை – 30 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை வழங்குகிறது ஜப்பான்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையினை கவனத்திற்கு கொண்டு ஜப்பான் இலங்கைக்கு முப்பது இலட்சம் அமெரிக்க டொலர்களை அவசர நிவாரண நிதியாக வழங்கவுள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயம் இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் எந்த ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு வலியுறுத்தியுள்ளது.
தங்களது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் பலமான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் சட்ட அமுலாக்கம் என்பன தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மூன்று கட்டளைச் சட்டமூலங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு!
ஏற்றுமதி பயிர்களான கித்துள் மற்றும் பனை உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிப்பத...
உயிரிழந்த இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு!
|
|