பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமிருக்கும் – இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்வதற்கு இந்தியா உதவும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதுவே தனது முக்கிய பணியாக விளங்கப்போகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டில் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்ட பல தருணங்களில் முதலில் உதவிய நாடு இந்தியா, இந்த ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வது குறித்தும், மேலும் விஸ்தரிப்பது குறித்தும், ஆர்வம் கொண்டுள்ள தலைவர்கள் இரு நாடுகளிலும் உள்ளமை அதிஸ்டவசமான விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த இணைய கற்கை நெறிக்கும் நாங்கள் ஏற்பாடு செய்தோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புதிய அம்சம். கொவிட் பல சவால்களை உருவாக்கியுள்ளது. இது பாதுகாப்பான சமூகவிலக்கல், கட்டுப்பாடுகள், போக்குவரத்து தொடர்பானது மாத்திரமில்லை.

இந்தியா இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்கின்றது என்பது முக்கியமான அம்சம். இருநாடுகளின் சுகாதார நிபுணர்கள் மத்தியில் பல தொடர்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  இந்தியா தனது பிரதான அமைப்புகள் மூலம் இதனை ஏற்பாடு செய்தது, ஆகவே நெருக்கடிகளை கையாள்வதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பது இரு நாடுகளின் தலைமைத்துவங்களின் நோக்கமாகும்.

இலங்கையை சேர்ந்தவர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்புவதில் நாங்கள் இணைந்து பணியாற்றுகின்றோம். இரு நாடுகளும் ஒவ்வொரு சவால்களையும் வாய்ப்பாக பார்க்கின்றன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்து சிந்திக்கும்போது நாங்கள் போராடவேண்டிய பாரிய சவால்கள் உள்ளன. இருநாடுகளும் இந்த விடயத்தில் நெருக்கமாக ஒத்துழைக்கப்போகின்றன,

கொவிட் 19 காரணமாக உண்டான பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கும் ,ஒத்துழைப்பிற்கான வழியை உருவாக்குவதற்கும் இலங்கை தலைவர்களுடன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதே எனது முக்கிய பணியாக அமையப்போகின்றது என தெரிவித்த தூதுவர் பால்கே சமாதானம் பாதுகாப்பு பகிரப்பட்ட பொருளாதார செழிப்பு குறித்து இருதரப்பிடையேயும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை கொண்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: