பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது – இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறினார் அமைச்சர் அலி சப்ரி!

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, இந்தியா உதவுகின்றமைக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதலின் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) உடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியா, இலங்கைக்கு வழங்கிய உதவியைப் போன்று ஏனைய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துகூட வழங்கவில்லை என்று தாம் எண்ணுவதாக அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
2022 ஆம் ஆண்டில் நாட்டைப் பாதித்த பெரும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது.
“எங்கள் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதலின் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா உள்ளது. இந்தியா நமக்குச் செய்ததை மற்ற எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்.
3.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் வரி எங்களுக்கு இன்னொரு தடவை போராட ஒரு உயிர்நாடியை வழங்கியது. நாங்கள் இந்தியாவிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம் இந்த மாத இறுதிக்குள் IMF – EFF திட்டத்தை நாடு எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|