பொருளாதார நெருக்கடியால் பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் – எச்சரிக்கும் கல்வியாளர்கள்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதாதிகளை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
80 பக்கங்கள் அடங்கிய அப்பியசாக்கொப்பியொன்று 100 ரூபாவுக்கும், 160 பக்கங்கள் 180 ரூபாவுக்கும், 200 பக்கங்கள் 250 ரூபாவுக்கும், 400 பக்கங்கள் அடங்கிய அப்பியாசக் கொப்பி 375 ரூபாவுக்கும் சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், 40 பக்கங்கள் அடங்கிய சீ.ஆர் கொப்பி ஒன்று 115 ரூபாவுக்கும், 80 பக்கங்கள் 190 ரூபாவுக்கும், 120 பக்கங்கள் 250 ரூபாவுக்கும், 160 பக்கங்கள் 290 ரூபாவுக்கும், 200 பக்கங்கள் அடங்கிய சீ.ஆர் கொப்பி ஒன்று 360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர, பென்சில் 30 ரூபாவுக்கும், பேனை 35 ரூபாவுக்கும், 500 தாள்களை கொண்ட எ-4 பொதியொன்று 2000 ரூபாவுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளில் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் பேருந்து பயண கட்டணங்களும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, மாணவர்களின் நலன் கருதி இணைய வழி கற்றல் முறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்குமாறு சகல அதிபர் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் எஸ்.பிரணவதாஸன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொலைக்காட்சிகள் ஊடாகவும் கற்றல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|