பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் – ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 26th, 2023

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து குறித்த வேலைத்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கொள்கை அடிப்படையிலான தலா 2 கடன் வசதிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ், 2 சதவீத வருடாந்த வட்டி வீதத்தில் 5 வருட சலுகைகாலத்துடன், 25 வருட மீள் செலுத்துகை தவணை காலத்துக்கான கடனை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: