பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!

பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உறவுகளை வலுப்படுத்திச் செல்வதற்காக ஆதரவு வழங்கப்படும் என ஜனாதிபதியை சந்தித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை முகங்கொடுத்துள்ள தற்போதைய நெருக்கடி நிலைமையை நன்கு புரிந்துள்ளதாகவும், விரைவாக நாடு வழமைக்கு திரும்பும் என தாம் நம்பிக்கை கொள்வதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் ஜனாதிபதி!
பொது மக்களின் செயற்பாட்டினால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம் - எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சின...
சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் தினமும் 100 பேர் அகால மரணம் !
|
|