பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு!

Wednesday, April 25th, 2018

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதலை நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நாவற்குழியில் கடந்த வெள்ளிக்கிழமை  வெளிக்களப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்.

தலையில் பலத்த காயங்களுக்குள்ளான அவர்,  சாவகச்சேரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடமையின் போது உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டித்தும் அவர் மீது தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் விரைவான  விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுமே சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts: