பொருளாதாரா நெருக்கடிக்கு போராட்ட நெருக்கடியின் மூலம் தீர்வு காண முடியாது – நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Thursday, April 14th, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு போராட்ட நெருக்கடியின் மூலம் தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாடளாவிய ரீதியில் மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்களால் சுற்றுலாத் துறை பெருமளவில் பாதிப்படைகின்றன.

மாதமொன்றிற்கு 100 000 வரையான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவார்கள். அது தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளது.

காரணம், நெருக்கடியும் போராட்டங்களும் இருக்கும் இடத்தில் விடுமுறைக்கு யார் செல்ல விரும்புகிறார்கள்.

எமது நாட்டின் பிரதான வருமானமே சுற்றுலாத் துறை தான், உங்கள் போராட்டங்களால் அதுவும் இப்பொது பாதிப்படைந்துள்ளது.

தொழிற்சாலைகள் இயங்காததாலும் வங்கிகள் முன்பு போல் செயல்படாததாலும் எங்கள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. ஒரு நெருக்கடிக்கு இன்னொரு நெருக்கடியின் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: