பொருளாதாரத்தை தாக்க தயாராகும் கொவிட் 19 – எச்சரிக்கும் உலக வங்கி !

Saturday, April 4th, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவலானது உலக பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது வறுமை கோட்டுக்கு கீழுள்ள நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனைத்தும் குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முறையான வேலைத்திட்டங்களை தொடங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக உலக வங்கியானது அபிவருத்தி அடைந்து வரும் நாடுகளுக்காக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதோடு அதில் ஒரு பில்லியன் இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 478 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதோடு, மொத்தமாக 2,597 பேர் இதுவரையில் குறித்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்தியாவில் இதுவரையில் 72 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: