பொருளாதாரத்தை உயர்த்த தனியார் முதலீடு – பிரதமர் ரணில்!

Sunday, October 22nd, 2017

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்காக முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற வியாபாரிகளுடனான சந்திப்பொன்றில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டியில் அபிவிருத்தியை ஏற்படுத்த தனியார் துறையின் பங்களிப்பு அவசியமானது

எனவே தனியார் துறையின் முதலீடுகளை ஊக்குவிக்க வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் எதிர்ப்பாரத்தது. எனினும் தற்போதைய கடன் நெருக்கடி நிலையில் அதனை மேற்கொள்ள முடியாது.

எனவே, புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற தனியார் நிறுவனங்களுக்கு விசேட வரப்பிசாதங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கில் முதலீடு செய்ய முன்வருகின்றவர்களுக்கு 300 சதவீத விசேட சலுகைகள் வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் பத்து வருடங்களில் வங்காள விரிகுடா நாடுகள் பெரும் அபிவிருத்தியை அடையும் சூழல் காணப்படுகின்ற நிலையில், திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதனால், திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையில் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டுவருவதாக பிரதமர் குறிப்பிட்டார்

Related posts: