பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள மக்களுக்கு எம்மாலான உதவிகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன் – ஈ.பி.டி.பியின் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் தெரிவிப்பு!

Wednesday, April 27th, 2022

உள்ளூராட்சி மன்றத்தின் எஞ்சியுள்ள ஆறு மாத காலப்பகுதிக்குள் எம்மால் செய்ய முடிந்தவற்றை பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள எமது பிரதேச மக்களுக்கு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபையின் உறப்பினர் சிவபாலசிங்கம் விமலானந்தராணி தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பருத்தித்துறை பிரதேச சபைக்கு புதிய உறுப்பினராக் நியமிக்கப்பட்டுள்ள  திருமதி சிவபாலசிங்கம் விமலானந்தராணி இன்றையதினம் தனது கன்னி அமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதுரு அவர் மேலும் கூறுகையில் –

இந்தசபையின் ஆயுள்காலத்தின் இறுதியாண்டு காலப்பகுதியே நான் உறுப்பினராக இந்த சபைக்க வந்துள்ளேன். அந்தவகையில் எனது இந்த பிரதேச மக்களுக்கு சேவைகளை மேற்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை எனக்க தந்த எமது கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எனது நெஞ்சார்ச்த நன்றிகளை  தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் பருத்தித்துறை பிரதேச சபை இரண்டு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய நிலையில், அதற்கு மத்திய மாகாண அரசுகளால் கிடைக்கப்பெறுகின்ற மூலதனவளங்கள் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு பகிரப்படுகின்றன.

எனவே எமது பிரதேசத்தின் வளர்ச்சி கருதி மருதங்கேணி பிரதேச செயலக பிரிவை ஒரு தனியான பிரதேச சபை பிரிவாக பிரகடனப்படுத்த வேண்டிய பணிகளை ஆக்கபூர்வமாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.

அத்துடன் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள எமது மக்களுக்கு, குறிப்பாக பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு சபையின் சட்ட யாப்புகளிற்கு அமைய முடிந்தளவு உதவ முயற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கு எமது சபை முழுமையான ஒத்துழைப்பையும் வஙங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தமை குறிபபிடத்தக்கது

000

Related posts: