பொருத்து வீடுகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்

பொருத்து வீடுகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறும் நோக்கில் யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் அபிப்பிராயப் பேட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தற்போது பல தரப்பினராலும் எதிர்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக மாவட்ட செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதேச செயலகங்களின் வரவேற்புப் பிரிவில் அபிப்பிராயப் பெட்டிகள் தொங்க விடப்பட்டுள்ளன.
பொறுத்து வீடுகளை விரும்பும் பயனாளிகளின் அபிப்பிராயங்கள் கிடைத்ததும் அவற்றைப் பெற்றுக் கொடுக்கவே தற்போது சகல பிரதேச செயலகங்களிலும் இந் நடைமுறை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பூர்வீக இடத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
தொடர் மழை: வைரஸ் காய்ச்சலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்?
2022 சாதாரண தரப் பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
|
|