பொருத்து வீடுகளையாவது பெற்றுத்தாருங்கள்: ஈ.பி.டி.பியிடம் மணியந்தோட்ட பகுதி மக்கள் கோரிக்கை!

Friday, October 14th, 2016

அரியாலை மணியந்தோட்டம் நாவலடி பகுதி மக்கள் தமது வாழிடங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக பொருத்து வீடுகளை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதி மக்களது அடிப்படை  பிரச்சினைகளை ஆராயும் முகமாக நேற்றையதினம் அப்பகுதி மக்களால் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் விசேட அதிதியாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் கலந்துகொண்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார். இதன்போதே அப்பகுதி மக்கள் குறித்த கோரிக்கையை ரவீந்திரதாசனிடம் முன்வைத்தள்ளனர்.

மக்களது அன்றாட பிரச்சினைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட ரவிந்திரதானசன் குறித்த கோரிக்கை மற்றும் பிரச்சினைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது பார்வைக்கு கொண்டுசென்று தீர்வுகள் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது கிராமிய அபிவிரத்தி சங்க செயலாளர் தவச்செல்வம் உடனிரந்தார்.

unnamed (1)

unnamed

Related posts: