பொருத்தமான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கை – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவிப்பு!

Wednesday, January 6th, 2021

கொவிட் தொற்றிலிருந்து இலங்கை மக்களை மீட்டெடுப்பதற்கு பொருத்தமான தடுப்பூசியை அடையாளம் காண்பதில் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்

இன்று நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக தெரிவிக்கையில், தடுப்பூசி தொடர்பான ஆய்வறிக்கை உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.

தடுப்பூசியை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவு, தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கான வெப்பநிலை தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இவை தொடர்பிலான விடயங்களை அங்கீகரிக்கப்பட்ட மருந்தக ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் மூலம் பெறப்பட்ட அங்கீகாரம் உள்ளிட்ட விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்பொழுது வெளிவந்துள்ள தடுப்பூசிகள் பொரும்பாலானவற்றுக்கு இந்த விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட பிரதிநிதி என்ற வகையில் லலித் வீரதுங்க பல்வேறு நாடுகளுடன் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.

கொவிட் தடுப்பூசி தொடர்பாக ழுழுமையாக மதிப்பீடுகளை மேற்கொண்டு இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் இருப்பதாக தெரிவித்த அவர், இலங்கையில் தேசிய நோய் எதிர்ப்பு சக்தி கொள்கைக்கு உட்பட்ட வகையில் உரிய தடுப்பூசியை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான தொற்று நோய்க்கான ஆலோசனைக் குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: