பொருட்களை கட்டுப்பாட்டு விலைகளில் விற்பனை செய்வது சிரமம் – இறக்குமதியாளர்கள்!

தற்போது அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்பனை செய்வது சிரமமான காரியம் என உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி நீக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக ஒரு கிலோ கிராம் எடையுடைய சீனியை இறக்குமதி செய்வதற்கு 115 ரூபா செலவாவதாகவும் இதில் 30 ரூபா அரசாங்க வரி எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வரியை நீக்கினால் ஒரு கிலோ கிராம் சீனியை 85 ரூபாவிற்கு இறக்குமதி செய்து, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையான 97 ரூபாவிற்கு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். மேலும் கடலைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை காரணமாக பெரிய கடலையை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|