பொருட்களின் விலைகள் உயர்வடையாது!

புதிய வரவு செலவுத் திட்டத்தில் பொருட்களின் விலைகள் உயர்வடையாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான விலைகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உயர்த்தப்படாது.
மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்கள் வழங்குவதனை விடவும் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.வாகனங்களின் விலை உயர்த்தப்படுமா இல்லையா என்பதனை வரவு செலவுத் திட்டம் வரையில் காத்திருந்துதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Related posts:
எமது இளைம் சமூதாயம் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆணி வேர் கண்டறியப்பட வேண்டும் : மல்லாகம் ம...
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி - அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!
|
|