பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம் – ஷெஹான் சேமசிங்க!

பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான மற்றும் அவசியமான பல பொருட்களுக்கே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேநேரம் குறித்த விவாதத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதை 4 அல்லது 05 வருடங்களுக்கு நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
000
Related posts:
15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா - யுனிசெப் தகவல்!
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கையை பாதிக்காது - அமெரிக்கா அறிவிப்பு!
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் சீன உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்க...
|
|