பொய் கூறி ஆட்சியை கைப்பற்ற முற்பட்டால் எதிர்க்கட்சி நிலையையும் இழக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 10th, 2022

பொய்களை கூறி 2015 இல் ஆட்சியைக் கைப்பற்றிய எதிர்க்கட்சியினர் தற்போது மீண்டும் பொய்களைக் கூறி ஆட்சியை கைப்பற்ற முனைந்தால், இருக்கின்ற எதிர்க்கட்சியையும் இழக்க நேரிடுமென இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடகவியலாளர்களை துரத்தித் துரத்தி தாக்கி, படுகொலை செய்து ஊடக சுதந்திரத்தை இல்லாதொழித்த எதிர்க்கட்சியினர் இன்று ஊடக சுதந்திரம் பற்றி பேசுவது விந்தையானதெனவும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடியை அரசியலாக்கிக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைப்பதற்கு எதிர்க்கட்சியினர் முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: