பொய்யான குற்றச்சாட்டு – ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

Saturday, May 14th, 2022

மத்திய அதிவேகப் பாதையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஊழல் எதிர்ப்பு அழைப்பாளர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக முன்னாள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 1 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி செய்தியாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த வசந்த சமரசிங்க அதில்,

கலகெதர மற்றும் ரம்புக்கனை வரையிலான 20 கிலோமீற்றர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு விலை மனு கோரப்பட்ட நிலையில், சீன நிறுவனத்தின் விலைமனுவுக்கு ஆதரவாக செயற்பட்டு அதனூடாக மோசடி இடம்பெற பங்களித்ததாவும், இந்த நிதி மோசடியால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு சுமாராக 164.4 பில்லியன் ரூபாவாகும், இது பிரபல பிணைமுறி மோசடியை விட பத்து மடங்கு அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் தனது கட்சிக்காரர் மேற்படி மோசடியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிப்பதன் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை ஏமாற்றி தவறாக வழிநடத்தியதாகவும், செய்தியாளர் சந்திப்பு வசந்த சமரசிங்க உத்தியோகபூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.

அதன் இணைப்பு அவரது முகநூல் மூலம் வெளியிடப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு அவற்றை பார்ப்பதற்கு இடமளித்ததன் ஊடாக மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தி அதனை விளப்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மைக்குப் புறம்பானதாகவும், அடிப்படையற்றதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறி, 14 நாட்களுக்குள் தனக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி அவருக்கு எதிராக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 1 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: