பொன்.சிவகுமாரனின் 45வது சிரார்த்ததின நிகழ்வு இன்று அனுஷ்டிப்பு!

Wednesday, June 5th, 2019


தியாகி பொன்.சிவகுமாரனின் 45வது சிரார்த்ததின நிகழ்வு இன்று யாழ் உரும்பிராயில் அனுஷ்டிக்கப்பட்டது.

உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்றுகாலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஈகைச்சுடரை தியாகி சிவகுமாரனின் சகோதரி ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பலதரப்பட்ட அரசியல் பிரமுகர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகர் தவராசா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு பொன்.சிவகுமாரனது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொன் சிவகுமாரன் அவர்களது புகழுடல் தகனம் செய்யப்பட்ட மயானத்தில் பொதுச் சுடரேற்றி மெழுகுவர்த்தி கொழுத்தி நினைவு கூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: