பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் நிறுத்தப்பட்டது – பரிபாலன சபை அறிவிப்பு!

Friday, August 13th, 2021

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது என பரிபாலன சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான ஆவணி மகோற்சவம் நாளை 14 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி மறைத்து காப்புரிமை – யாழ். மாநகர சபையின் பித்தலாட்டத்தால் இழப்...
பிரிந்து செயற்பட்டது போதும் – நாட்டின் நிலைமையை புரிந்துக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அனைத்...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்!