பொன்னாலைப் பாலத்தில் விபத்துக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Wednesday, January 9th, 2019

அண்மைக்காலமாக பொன்னாலைப் பாலத்தினூடாக மேற்கொள்ளப்படும் பல பயணங்கள் விபத்துக்களில் போய் முடிந்துள்ளன. அவற்றில் பலத்த காயங்களும் உயிர் இழப்புக்களும் இடம்பெற்றுள்ளமை கவலை தரும் விடயமாகும். அவ்வாறு ஏற்படுகின்ற விபத்துக்களில் பெரும்பாலானவை இரவு நேரங்களில் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கத்தக்கது.

பாலத்தில் இரவு வேளைகளில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் உபகரணங்களுடன் பாதையின் இரு புறமும் பயணிப்பதாலும் ஊர்காவற்றுறை மீன்பிடித் துறைமுகத்தை நோக்கி  பிற பிரதேச மீனவர்கள் நாளாந்தம் பயணிப்பதாலும் குறித்த பாலத்தினூடாக இரவுப் பயணங்கள் அதிகரித்துள்ளன. இதனால் கும்மிருட்டுக் காரணமாக பல்வேறு விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டவண்ணமுள்ளன.

ஆகவே இவற்றைத் தவிர்ப்பதற்கு பாலம் முழுவதும் வலுக்கூடிய தெரு விளக்குகளைப் பொருத்துதல், வேகக் கட்டுப்பாடுகளை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளல், போக்குவரத்துப் பொலிசாரின் கண்காணிப்பை அதிகரித்தல் போன்ற விடயங்களை உரிய அதிகாரிகள் முன்னெடுப்பது அவசியம்.

Related posts: