பொது மக்களுக்கான தினம் மறு அறிவித்தல் வரை முன்னெடுக்கப்படாது – கல்வி அமைச்சு!

கல்வி அமைச்சின் பொது மக்களுக்கான தினத்தை மறு அறிவித்தல் வரை முன்னெடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சினால் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் எதாவது தகவல் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அல்லது சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கல்வி அமைச்சின் துரித இலக்கம் 1988க்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பொது நிலையங்களில் பொது மக்கள் ஒன்று கூடுவதனை தவிரத்து பொது மக்களின் பாதுகாப்பு கருதி இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பது வேதனைக்குரிய விடயம்!
சங்கரத்தையில் நேற்றிரவு இருவர் மீது வாள்வெட்டு!
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
|
|