பொது சுகாதார விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எச்சரிக்கை!

Sunday, April 11th, 2021

பண்டிகை காலங்களில் பொது சுகாதார விதிகளை மீறும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த சுற்றறிக்கையின்படி, சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த கடுமையான கண்காணிப்பு செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்..

தேவேளை கடந்த சில நாட்களில் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் பேருந்து ஊழியர்கள் சரியான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் விளைவாக இந்த விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய, அனைத்து மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகலும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரிசி கட்டுப்பாட்டு விலை அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை!
மலசல கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென முழைத்த கடைகள்: பின்னணியில் யாழ். மாநகரி...
பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் - கல்வி அமைச்சர் சுசில் ப...