பொது சுகாதார பரிசோதர் மீது தாக்குதல் – யாழ். அத்தியடியில் சம்பவம்!
Sunday, June 21st, 2020யாழ். நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு வந்த நபர் அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் ஸ்டான்லி வீதி அத்தியடிச் சந்தி பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதர பரிசோதகர் சிகிக்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுவதால் அதற்கு அண்மித்த இடங்களில் உள்ளவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர்.
Related posts:
அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல் மீட்பு!
எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்ப...
திட்டங்களை உரிய நேரத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் மோடியின் வளர்ச்சி - இந்திய நிதி...
|
|