பொது சுகாதார பரிசோதகர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு!

Monday, September 4th, 2017

நாடு முழுவதுமுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்

இலங்கை பொது சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் ஐந்து பேருக்கு அநீதியான முறையில் இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் மாநாகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் 5 பேரும், சுகாதார செயலாளரால் இடமாற்றம் செய்யப்பட்டு 4 மாத காலமாக வேதனம் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன் பின்னரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: