பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்!

பொது இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற விசேட குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொவிட் நோய் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள் ளது.
இதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொது இடங்களுக்குள் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கொவிட் குழு முடிவு செய்துள்ளது.
000
Related posts:
உள்ளூராட்சி உறுப்பினர்களின் அதிகரிப்பால் அரசுக்கு மாதம் 12 கோடி ரூபா செலவு!
இலங்கை ஆப்கானுக்கிடையே சிறை கைதிகள் குறித்து ஆராய்வு!
தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெர...
|
|