பொது இடங்களில் பட்டாசு கொளுத்த தடை விதித்தது வலி.கிழக்கு பிரதேச சபை!

வலி.கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பொது இடங்களில் பட்டாசு கொளுத்துவதற்குத் தடை விதித்து வலி.கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலி.கிழக்கு பிரதேச சபையில் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சபை உறுப்பினர் இரா.ஐங்கரன் மேற்குறித்த பிரேரணையை முன்வைத்தார்.
அவர் உரையாற்றுகையில்:
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் மரணச் சடங்குகள், களியாட்ட நிகழ்வுகள், வரவேற்பு நிகழ்வுகளுக்கு பட்டாசு கொளுத்தும் கலாசாரம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
வீதிகளில் பட்டாசு கொளுத்தும் போது வீதியால் செல்லும் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள், நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
இதனால் பொது வீதிகளில் பொது இடங்களில் பட்டாசு கொளுத்துவதை தடை செய்ய வேண்டும் என பிரேரணையை முன்மொழிந்தார்.
குறித்த பிரேரணை ஏற்கப்பட்டதுடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
Related posts:
|
|