பொது இடங்களில் நாய்களை விட்டுச் சென்றால் அபராதம்!

Friday, March 24th, 2017

பொது இடங்களில் நாய்களை விட்டுச் செல்லும் நபர்களுக்கு 25,000 ரூபாய்க்கு மேற்படாத அல்லது 2 வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

கட்டாக்காலி நாய்களின் பிரச்சினை நாளுக்கு நாள் வலுப்பெற்று செல்வதால், நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts: