பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும்போதுதான் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும் – ஐங்கரன்!
Friday, June 9th, 2017
பிரதேச மற்றும் கிராமமட்டங்களிலுள்ள பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும் போதுதான் அந்தந்தபகுதிகள் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும். இதைமக்கள் உயர்ந்து செயற்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி வளலாய் வடக்கு எமலின் முன்பள்ளியினதும்,வேளாங்கன்னிமாதர் சங்கத்தினதும் வருடாந்தவிளையாட்டுநிகழ்வுகளில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுடைய தேவைகளை அறிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி அரச உத்தியோகத்தர்களும் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படவேண்டும்.
அதுமட்டுமன்றி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டியதும் அவசியமானதாகும்.
ஒரு பிரதேசத்தை அல்லது ஒரு கிராமத்தை அபிவிருத்தியில் முன்கொண்டு செல்லவேண்டுமாயின் அங்குள்ளபொதுஅமைப்புக்கள் ஒற்றுமையாகசெயற்படவேணடும்.
இந்தக் கிராமத்தில் முன்பள்ளியின் தேவைப்பாடுஉள்ளநிலையில்,முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரித்து எதிர்காலத்தில் முன்பள்ளிக் கல்வியைமேம்படுத்த வேண்டியதுஅவசியமானதாகும் என்றும் தெரிவித்தார். நிகழ்வில் பிரதமவிருந்தினராக அச்சுவேலி பங்குத்தந்தை வணபிதா ஜெயக்குமார் அடிகளார் கலந்துகொண்டார்.
Related posts:
|
|