பொதுவாக உத்தியோகத்தர்கள் போன்று தமக்கான ஊதியம் இந்த ஆட்சியில் கிடைக்கும் – முன்பள்ளி அசிரியர்கள் நம்பிக்கை!

Wednesday, June 2nd, 2021

ஜீன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நாடளாவிய ரீதியில் மாதாந்தம் 250 ரூபாய் கொடுப்பனவை பெற்று வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமது கொடுப்பனவு அதிகரிப்பு குறித்து வடக்கின் முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் தமது எதிர்காலம் கருதி நிலையான பொருளாதாரத்துக்கேற்ற வகையில் தமக்கான கொடுப்பனவை ஏனைய அரச ஊழியர்களை போன்று இந்த அரசாங்கம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கம்’ கொள்கைப் பிரகடனத்திற்கமைய, முன்பள்ளி ஆசிரியர்களை மனிதவள அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தரப்பினராக அடையாளங்கண்டு, அவசியமான பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுக்கு நிரந்தரக் கொடுப்பனவை வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், வடபகுதி முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமது வாழ்வாதார நிலைமை குறித்த கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருந்தனர்.

இதன்காரணமாக, குறித்த ஆசிரியர்களின் பொருளாதார நிலைமை கருதி கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட கடும் முயற்சி காரணமாக வடக்கின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்கனவே 6 அயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்து.

எனினும், குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் உள்வாங்கப்பட்ட சுமார் 360 முன்பள்ளி ஆசிரியர்கள் வடக்கு மாகாணத்தில் 250 ரூபாய் கொடுப்பனவுடன் கடமையற்றி வருகின்ற நிலையில்,  அவர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், முன்பள்ளி ஆசிரியர்களது கொடுப்பனவை ஏனைய அரச ஊழியர்களைப் போன்று முழுமையான ஊதியமாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் தொடர்ச்சியாக பிரஸ்தாபித்து வருகின்றார்.

அதுமட்டுமல்லாது கடந்த வாரம் டிடி தொலைக்காட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் நேரலை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகியிருந்த சமயம் முன்பள்ளி  ஆசிரியர் ஒருவர் தமக்கான கொடுப்பனவின் அதிகரிப்பு விடயம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறையாகவில்லை என்றும் அதனை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரியிருந்தார்.

இதன்போது குறித்த ஆசிரியருக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொடுப்பனவு அதிகரிப்புக்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் 250 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிப்பது உகந்ததென அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


குற்றவாளியாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் உள்நாட்டு விளையாட்டுத்துறை அமைப்புகளில் பதவிகளை வகிக்க தடை...
ஒக்டோபர்முதல் 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் - இராணுவத் தளபதி அறிவிப்பு!
இன்று மின்வெட்டு இல்லை - எனினும் கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டினால் மின்தடை ஏற்படலாம் - பொது...