பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!
Thursday, August 26th, 2021கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக விதிக்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
நாடு மூடப்பட்டுள்ள நேரத்தில் கட்டுப்பாடுகள் கடுமையான முறையில் விதிக்கப்படுகின்றனவா என்ற கவலைகள் எழுந்துள்ளன எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமந்தா ஆனந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயணக்கட்டுப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் வீதிகளில் பல வாகனங்கள் காணப்படுவதாகவும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார பாதிப்பு மற்றும் பல சமூக பிரச்சினைகள் மற்றும் குறுகிய கால, நீண்ட கால பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பூட்டுதலை விதிக்கும் கடினமான முடிவை அரசாங்கம் எட்டியுள்ளது என்றார்.
எனவே பயணக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|