பொதுமக்கள் செலுத்தும் மின்கட்டணங்களை பயன்படுத்தி முறைகேடு – நுகர்வோர் உரிமை அமைப்பு எச்சரிக்கை!

Monday, May 25th, 2020

பொதுமக்கள் செலுத்தும் மின்சாரக்கட்டணங்களை பயன்படுத்தி இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் வருமானவரியை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே நியுஸ்ரேடியோவிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முயற்சியின் மூலம் பாரியமோசடியொன்று இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தனியார்துறை ஊழியர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானம் பெற்றால் அவர்கள் அரசாங்கத்திற்கு வருமான வரி கட்டவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தொழில்வழங்குநர் பணியாளரின் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியையே உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மின்சாரசபையில் இது இடம்பெறவில்லை மாறாக பணியாளர்கள் வரி செலுத்தவில்லை மாறாக பொதுமக்கள் செலுத்திய மின்கட்டணத்திலிருந்தே வரி கட்டப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

2015 இல் இது சட்டவிரோதமான நடவடிக்கை என அறிவிப்பு வெளியானது என நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பணியாளரே தனது வருமான வரியை நேரடியாக செலுத்துவதை உறுதி செய்யும் புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் உயர் அதிகாரிகளின் வருமா வரியை சட்டவிரோத முறையில் செலுத்துகின்றது என அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: