பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸாரின் விஷேட நடவடிக்கை – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தகவல்!

பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பொலிஸார், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்வதற்காக, பொலிஸார் தொடர்ந்தும் சோதனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் பயணிக்கும்போது, அவதானத்துடன் செல்ல வேண்டும். மதுபோதையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்ப்பதுடன், வீதி விதிமுறைகளை உரியவாறு பின்பற்ற வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கச்சாய் - பருத்தித்துறை வீதியில் 21 கிலோ மீற்றருக்கு காப்பெற் - முதற்கட்ட பணிகள் ஆரம்பம் கம்பங்கள் ப...
ஜனாதிபதி - கடற்படைத் தளபதி சந்திப்பு!
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம்!
|
|