பொதுமக்களின் கவனக்குறைவும் பொறுப்பின்மையுமே கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டு!

Friday, January 29th, 2021

பொதுமக்களின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பின்மை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற மறந்துவிட்டார்கள் என குறித்த சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இது மிகவும் பரிதாபகரமான சூழ்நிலை என்றும் சுகாதார அதிகாரிகளாக இந்த நிலமையாக் காணும்போது மிகவும் வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மக்கள் ஒவ்வொருவருக்கும் பின்னல் சென்று சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கச் சொல்ல முடியாது என்றும் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நாட்டில் பரவுவதற்கு மக்களின் அலட்சியமே தற்போதைய ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுத்தது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சுகாதார அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிபபிடத்தக்கது.

000

Related posts:


உலகப் போராட்ட வரலாறுகளில் எங்குமே நடந்திருக்காத அர்ப்பணங்களை ஈழப்போராட்டத்தில் ஆற்றிய நம் தலைவர்கள்!...
துஷ்பிரயோகங்களை விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐக்கிய நாடுகளின் வல்லுநர்கள்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் ச...