பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரும் மானிப்பாய் பொலிஸார்.

Tuesday, November 7th, 2017

மானிப்பாய் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பை மானிப்பாய் பொலிஸார் கோரியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை, சுதுமலை, மானிப்பாய் நகரப்பகுதி போன்ற இடங்களில் அண்மைக்காலமாக சமூக விரோதச்செயல்கள், கொள்ளைச் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன. இவற்றில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தாலோ அல்லது குற்றச் செயல்களைக் கண்டாலோ உடனடியாகப் பொலிஸாருக்குத் தயக்கமின்றி தெரிவியுங்கள் எனப் பொலிஸார் கோரியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த நாம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மக்கள் தரும் தகவல்கள் தொடர்பாக இரகசியம் பேணப்படும்.

இதேவேளை மானிப்பாய் பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சமூகவிரோத செயல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இது வரை ஒருவரையும் கைது செய்யவில்லை என்றும் குற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: