பொதுமக்களின் அமைதியை பாதுகாக்குமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி உத்தரவு!

Thursday, December 22nd, 2022

இலங்கையில் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ம் சரத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தொடர்ந்தும் இராணுவத்தின் உதவி நாடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் இராணுவத்தின் உதவியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: