பொதுமக்களின் அமைதியை உறுதிசெய்ய ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!

Wednesday, August 23rd, 2023

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயம் 12 ஆம் பிரிவினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய,  பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று(23) சபையில் அறிவித்தார்.

பொதுமக்களின் அமைதியைப்  பேண நேற்று முதல் (22) நடைமுறைக்கு வருமாறு  இக்கட்டளை மூலம் இலங்கைத் தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது - ஈ.பி.டி.பி...
இலங்கைக்கு 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச...
நிதித் துறையின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்க...