பொதுமக்களிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் முக்கிய வேண்டுகோள்!
Saturday, December 26th, 2020நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீங்கள் பொருட்களை வாங்கும் போதோ அல்லது பணத்தை பரிமாறிக் கொள்கையிலோ போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், உண்மையான தாள்களிலுள்ள ஒத்த அம்சங்களை அடையாளம் காண முயற்சியுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அநுராதபுரத்தில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தது. போலி நாணயத்தாள்களை அச்சிடுவது தொடர்பாக இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும் என தெரிவித்தார்.
Related posts:
செக்.குடியரசின் ஜனாதிபதி இலங்கை விஜயம்!
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்டறிய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர தெர...
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் சாரதி அ...
|
|