பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாசம் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலகம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனங்களின் தேவை, எரிபொருள் செலவு, வாகன இறக்குமதிக்கான பரிவர்த்தனை என்பன குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2018 இல் ஆசியாவின் முதலாவது சுற்றுலாத்திட்டம்!
அதிகரித்துவந்த உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தியது கொரோனா – இலங்கை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு...
சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
|
|