பொதுப் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

Monday, July 29th, 2019

புகையிரதம், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ஏனைய அனைத்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் கடந்த 27 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த அறிவித்தலினால் ரயில்வே துறையிலுள்ள சகல பிரிவுகளின் கடமைகளும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: