பொதுப் பொக்குவரத்து சேவையில் யாசகம் எடுக்க தடை – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பேருந்துகள் மற்றும் புகையிரங்களில் யாசகம் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அது தொடர்பில் தனியார், அரச பேருந்து நிறுவனங்கள் மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொது போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தொடர்ந்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றையதினம் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

சில யாசகர்கள் பயணச்சீட்டுக்களை பெற்று பேருந்து மற்றும் புகையிரதங்களில் ஏறுவதாகவும் சிறிது தூரம் சென்றதும் பயணிகளிடம் யாசகம் பெற ஆரம்பிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாசகர்களின் செயல்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக அமையலாம் என்பதால், அது குறித்து கவனம் செலுத்தி, பேருந்து மற்றும் புகையிரதங்களில் யாசகம் பெறுவதை தடைசெய்யுமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: